Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2008
கனவான நனவு
நா.நளினிதேவி

காட்சி-9
இடம் : கோயில் வளாகம்
உறுப்பினர்கள் : கோயில்காரர், விஷ்ணுசித்தர்

கோ.கா. : என்ன சுவாமிகளே! எம் ஐயனின் திருத்தலங்கள் எல்லாம் சென்று சேவித்து வந்தீர்களா? அவனருளுக்கு ஒன்றும் குறைவில்லையே?

வி.சி. : எத்தனைத் திருத்தலங்கள் சென்றாலும், நம் ஊலும், கோயிலிலும் கிடைக்கும் ஆன்மநிறைவு கிடைப்பதில்லை என்னவோ உண்மை!

கோ.கா. : உண்மை! முக்காலும் உண்மை! அதிருக்கட்டும். திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம். இப்போது விட்டால் பையனுக்குத் திருமண யோகம் வர இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிடலாம்.

வி.சி. : நாங்கள் சென்று சேவித்த திருத்தலங்களில் எல்லாம் எல்லாம்வல்ல அந்த ஆண்டவன் சந்நிதியில் பூப்போட்டுப் பார்த்தோம். ஒரு கோயிலில் கூட இசைவான பூ வரவில்லை. குழந்தையும் "மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன்' என்கின்றாள். அவன் அருள் இன்றி நாம் என்ன செய்ய முடியும்? ஆண்டவன் திருவுள்ளத்தில் என்ன உள்ளதோ யார் அறிவார்!

கோ.கா. : தாங்கள் சொல்வது நகைப்பைத் தருகின்றது ஐயனே! மானிடர்க்கு என்று பேச்சுப்பட விரும்பாமலா ஊர்ப்பெண்களை தன்பின்னால் வரச்செய்து வைகறைக்குள்ளே வீடுவீடாகச் சென்று எழுப்பிக் கொண்டு சென்று நீராடிக் கோயிலில் வந்து வழிபடுகின்றாள். கன்னியர் அந்தப் பாடல்களைப் பாடினால் நல்ல மணவாளன் கிடைப்பான் அல்லவா?

வி.சி. : இளவயதுப் பெண்கள் ஒன்றாகச் சேர்வதும், பாடுவதும், வழிபடுவதும் இயல்புதானே? மனப் பொருத்தமும் இன்றிச் சாதகப் பொருத்தமும் இன்றி யாங்ஙனம் திருமணம் செய்ய இயலும்? இரண்டையும் ஒன்றாக இணைத்து ஏன் குழம்புகின்றீர்? எல்லாம் அவன் சித்தப்படி நடக்கும். அவனைமீறி நாம் என்ன செய்ய முடியும்? அவன் நமக்கிட்ட பணியை மட்டும் செய்து அவன் பாதம் பணிந்து அருள் பெறுவோம்!

கோ.கா. : தங்களை மீறி எதுவும் நடக்காது என்ற ஆண்டாளின் நம்பிக்கை புகின்றது. நன்றாகவே புகின்றது! (அவரது கண்களில் தென்படும் குரூரமான வஞ்சகத்தைக் காண நேட்ட விஷ்ணுசித்தர் திடுக்கிடுகின்றார். ஏதோ ஒரு முடிவுடன் இல்லம் திரும்புகின்றார்.)
சில நாட்கள் புயலுக்குப் பின்னர் அமைதியாய்க் கடந்து செல்கின்றன.

காட்சி-10

இடம் : விஷ்ணுசித்தர் இல்லம்
உறுப்பினர்கள் : விஷ்ணுசித்தர், கோதை, ஆண்டாள்.

வி.சி. : கோதை! அம்மா கோதை! குழந்தை ஆண்டாள் எங்கே? இருவரும் இங்கே வாருங்கள்.

கோதை : என்ன சுவாமி! ஆண்டாள் நீராடுகின்றாள். இதோ வந்துவிடுவாள்.

வி.சி. : மெதுவாகவே வரட்டும். ஆண்டாள், மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன் என்று கூறுவது, அந்தப் பரந்தாமனைத் தவிர வேறு மானிடர் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். அவனுக்கென்றும் யாருமில்லை. அவனையும் சிறுவயது முதல் அறிவேன். நற்பண்புகளின் உறைவிடம். அவனை ஆண்டாள் நாடுவதில் வியப்பொன்றுமில்லை. முன்பிறவியின் எச்சமாக இருக்கும்.

கோதை : ஐயனே! என்ன கூற வருகின்றீர்கள் என்பது அறிவிலிக்குப் புயவில்லை.

வி.சி. : புயவில்லையா? கோயிலாரும்-ஊராரும் மிகுந்த வன்மத்துடன் உள்ளார்கள். அவர்கள் செயல்படும் முன்பு நாம் செயல்பட்டாக வேண்டும்.
கோதை : ஆம் சுவாமி! கோதை பாடல்கள் யாப்பதும், அவளின் உயிர்த்தோழிப் பூவை அவற்றுக்குப் பண்ணிசைப்பதும், ஊர்ப்பெண்கள் அப்பாடல்களைப் பாடியும் கேட்டும் மகிழ்ந்தும், அவர்களைக் கொண்டாடுவது அவர்கட்கு அறவே பிடிக்கவில்லை! ஊர்ப்பெண்கள் கெட்டுப்போய் விடுவார்கள் என்றும் இன்னும் பலவாறும் ஏதேதோ பேசிக் கொண்டே உள்ளனர்.

வி.சி. : ஒன்று அவர்களுக்கு விருப்பமில்லை என்றாலோ, அவர்கள் விரும்பியது நடக்கவில்லை என்றாலோ எதனையும் செய்யத் துணிவர்!

கோதை : ஆம் சுவாமி! எனக்கும் அச்சமாகத்தான் உள்ளது! வீதியில் எங்கேனும் பார்த்து விட்டால் போதும். ஆண்டாளைப் பற்றி ஏதேனும் என்னிடம் வசைபாடுவது தெயாமல் உட்பொருளுடன் உரையாடாமல் விட மாட்டார்கள்! நான் கண்டுகொள்வதே இல்லை! கடையனும் கடையர்!
வி.சி. : எல்லாம்வல்ல ஸ்ரீமத் நாராயணன் அருளால், ஆண்டாளைப் பரந்தாமனுக்கே மணம் செய்வித்து, அவர்களிருவரையும் வேற்று ஊருக்கு அனுப்பி வைத்தால் ஒழிய இவர்கள் ஓயமாட்டார்கள்.

கோதை : (மட்டற்ற மகிழ்ச்சியுடன்) நல்லது! அப்படியே செய்வோம் சுவாமி!

ஆண்டாள் : என்ன ஊல் மட்டுமல்லாது இல்லத்திலும் என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றீர்களே?

கோதை : ஊரார் பேசுவது வேறு, நாங்கள் பேசுவது வேறு!

(விஷ்ணு சித்தன் முடிவைக்கூற ஆண்டாள் நம்ப முடியாமலும் நாணத்துடனும், உள்ளே ஓடுகின்றாள்.)

கோதை : பாவம்! அவளுக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்; மணம் செய்து கொண்டு மணாளனுடன் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்த வேண்டும் என்று கொள்ளை ஆசை! அவள் ஆசை நிறைவேறட்டும். நம்மால்தான் அவளது பிவைத் தாங்கமுடியாது; அவளது மகிழ்ச்சிதானே நமது மகிழ்ச்சி எனத் தேற்றிக்கொள்ள வேண்டும்.

காட்சி-11

இடம் : திருமண மண்டபம்
உறுப்பினர்கள் : ஆண்டாள், பூவை, கோயில் பணிப்பெண், குழலி மற்றும் பலர்.

பூவை : ஆண்டாள்! உன்னை இந்த மணக்கோலத்தில் காண்பது எனக்கு எத்தனை மகிழ்ச்சியாக உள்ளது தெயுமா? அந்தத் திருமகளே மனித உருவெடுத்து வந்தாற் போலுள்ளதடி! காணக் கண்கோடி வேண்டுமடி!

ஆண்டாள் : போதுமடி புகழ்ந்துரையும், ஒப்பனையும். எனக்கும் நம்பவே முடியவில்லை. நனவுதானா என்ற ஐயமும் அவ்வப்போது தோன்றுகின்றதடி. என்னையே கிள்ளிக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேனடி!

மணமேடையில் ஹோமம் வளர்ப்பதால் ஒரே புகையாய் உள்ளது. எளிமையான திருமணம்! பெருங்கூட்டமில்லை. புரோகிதர் சடங்குகள் செய்து கொண்டிருக்கின்றார்.

யாரோ ஒருவர் : பூவை! பூவை! உன்னை மணமேடைப் பக்கம் எதற்கோ அழைக்கின்றனர்!

பூவை : வேறு யாரையாவது அழைத்துச் செல்லுங்கள். மணப்பெண்ணுக்கு இன்னும் ஒப்பனை முடியவில்லை. என்னால் வர இயலாது எனக் கூறுங்கள்.

ஆண்டாள் : போய் என்னவென்று கேட்டுவிட்டு உடனே வந்துவிடு. அழைப்பது முக்கியமான காயத்துக்கு என்றால்...?

பூவை : இருக்கலாம்! இதோ நொடியில் வந்துவிடுவேன்! (என்று வெளியில் செல்கின்றாள்.)

குழலி : அம்மையீர்! திருமணக் கோலத்தில் தங்களைக் காண்பது நாராயணியையே நேல் காண்பது போல் உள்ளதம்மா...

ஆண்டாள் : (நாணத்துடன்) அப்படியெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு எதையாவது சொல்லவேண்டுமே எனச் சொல்லக்கூடாது.

குழலி : இல்லை தாயே! என் மனத்து எழுந்த உணர்வுகளை ஏழை எனக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை. இந்தாருங்கள் அம்மையே.. கோயில் பிரசாதம். திருமண நாளன்று கோயில் பிரசாதம் உண்ணக் கிடைப்பது நற்பேறு!

ஆண்டாள் : இப்போது என்னால் எதுவும் உண்ண முடியாது! துளசியை மட்டும் எடுத்துக் கொள்கின்றேன்

குழலி : இறைவன் பிரசாதம் அம்மையே.. எடுத்துக் கொள்ளுங்கள். (பொங்கலை எடுத்து உண்கின்றாள்.)

பூவை : (அவசரமாக ஓடி வருகின்றாள்.) யார் அழைத்தது என்றே தெயவில்லை! கோயில்காரர் பார்த்துவிட்டார். இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தார் - நாழியாகி விட்டது என்று கூறி நழுவி வந்து விட்டேன். என்னடி வாயில்?

ஆண்டாள்: நாம் நாளும் கோயிலில் பார்ப்போமே... நம்முடைய பாட்டிலும், வழிபாட்டிலும் ஆர்வமுடன் கலந்து கொள்வாள் தானே என்மீது மட்டற்ற அன்பு கொண்டவள் இந்தக் குழலி. கோயில் பிரசாதம் கொடுத்தாள். வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் கேட்கவில்லை. எளிய பெண்மனம் வருந்துவாளே அவளுக்காக சிறிது எடுத்து வாயில் போட்டேன்.

பூவை : (திடுக்கிட்டு) கோயில் பிரசாதமா? யார் கொடுத்தார்கள் குழலி? (என்று பதற்றத்துடன் கேட்க)

குழலி : (ஒன்றும் புரியாதவளாய்) ஏனம்மா? கோயில்காரர்கள்தான் பூஜை செய்த பிரசாதத்தை மணப் பெண்ணுக்குத் தருமாறு கொடுத்துவிட்டனர். அம்மையிடம் நான் மட்டற்ற அன்பு கொண்டவள் என்பது அவர்கட்குத் தெயும்! திருமணத்துக்குச் செல்வதாக அறிந்தவுடன் என்னிடம் கொடுத்தனுப்பினர்.

பூவை : (ஐயத்துடனும், அச்சத்துடனும்) இப்படி ஏதாவது நடக்கும் என்றுதான் உன்னைவிட்டு எங்கும் போகாமலிருந்தேன். உன் பேச்சைக்கேட்டு நான் சென்றது பெருந்தவறு! சிறிது நாழிக்குள் ஏதேதோ நடந்துவிட்டதே!

குரல் : மணப்பெண்ணை அழைத்து வாருங்கள்! நாழியாகிவிட்டது.

பூவை : இதோ வருகிறோம். வாடி போகலாம். கைகள் ஏனடி இப்படி நடுங்குகின்றன? (பதைக்கின்றாள்)

ஆண்டாள் : சிறிது நாழி இருடி - வயிறு என்னவோ செய்கிறது. நேற்று இரவும் இன்று காலையும் எதுவும் உண்ணவில்லையா? வெறும் வயிற்றில் பிரசாதத்தை உண்டது ஒத்துக் கொள்ளவில்லை போலும். கண்கள் இருட்டிக்கொண்டு வருகின்றன!
(மணமேடையிலிருந்து விரைவில் வருமாறு மீண்டும் குரல்)

ஆண்டாள் தள்ளாடியபடியே நடந்து வருகின்றாள். இரண்டு பக்கமும் தோழியர் குழாம். மண்டபம் புடையும், புழுக்கமுமாக உள்ளது. ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாத புகையில், மணமேடையில் எல்லாருடைய கண்களிலும் புகையால் கண்ணீர்! மணமகன் அருகே அமர வைக்கின்றனர். மந்திரங்கள் ஒலிக்கின்றன. மணமகன் அவள் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டவும் மங்கை சாய்ந்து விழவும் மேடையில் ஒரே குழப்பம். மணமகன் கையைப் பிடித்தவாறே ஆண்டாளின் உடல் மட்டும்! வாரணம் சூழ வசங்கம் நின்றூதக் கண்ட கனவு நனவானது. நனவு மீண்டும் கனவானதோ?
(நிறைவடைந்தது.)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com